இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்!

Wednesday, November 1st, 2017

இந்தோனேசியாவில் உள்ள அம்பான் என்ற தீவின் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இது 6.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியா பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல இன்றும் அங்கு பூகம்பம் ஏற்பட்டது.

சுமத்ராவை யொட்டியுள்ள அம்பான் என்ற தீவின் அருகே கடலில் நிலநடுக்க மையம் இருந்தது. கடலுக்கு அடியில் 32 கிலோ மீட்டர் ஆழத்தில் அதன் மையப்புள்ளி அமைந்திருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவானது.

Related posts: