கடல் மட்டம் அதிகரிக்கும்?

Friday, April 1st, 2016

தற்போது அதிகரித்தவரும் பூகோள வெப்பமடைதல் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதாக புதிய கணிப்பீட்டின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறித்த காலநிலை மாற்றம் காரணமாக அண்டாட்டிக்கா துருவ பகுதியில் பனிப்பாறைகள் உருகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இந்த நூற்றாண்டில் கடல் மட்டம் ஒரு மீட்டருக்கும் அதிகமான அளவில் உயரக் கூடும் என காலநிலை மாறுபாடு தொடர்பான சர்வதேச நிபுணர் குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், 2500 ஆம் ஆண்டளவில் கடல் மட்டம் இரண்டு மடங்காக உயரக்கூடிய சாத்தியம் இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் உலகளவில் காபன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதன் ஊடாக இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும் என காலநிலை மாறுபாடு தொடர்பான சர்வதேச நிபுணர் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி 21 ஆம் நூற்றாண்டில் கடல் மட்டம் 98 சென்டிமீட்டர்கள் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: