உலகை மிரள வைக்கும் சீனாவின் வரவுசெலவுத் திட்டம்!

Sunday, March 6th, 2022

சீனாவின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் சுமார் 230 பில்லியன் அமெரிக்க டொலர் இராணுவத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே தனது இராணு பலத்தை மேம்படுத்த கூடுதலான ஒதுக்கீடுகளை செய்துள்ள சீனா, இந்நதாண்டும் பெருமளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு இராணுவத்திற்கான ஒதுக்கீடு 6.8 சதவீதமாக அதிகரித்திருந்தது.

2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் 7.7 சதவீதம் உயர்த்தி 229 பில்லியன் டொலர் அளவிலான தொகையை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது.

ரஷ்ய – உக்ரைன் போர் முடியாத நிலையில், சீனாவின் இந்த இராணுவ சக்திக்கான ஒதுக்கீடு அதிகரித்துள்ளமை உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீதாக ரஷ்யாவின் தாக்குதல் போன்றே, சீனாவும் தாய்வானை இலக்கு வைத்துள்ளதாக போரியல் நிபுணர்கள் கூறிவரும் நிலையில் சீனாவின் திட்டம் உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: