பெண்கள் திருத்தொண்டராக உருவாகலாமா? ஆராய புதிய ஆணையம்!

Wednesday, August 3rd, 2016

ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் பெண்கள் திருத்தொண்டர்களாக பணிபுரிவதை பற்றி ஆராய்வதற்கு போப் பிரான்சிஸ் ஆணையம் ஒன்றை அமைத்திருக்கிறார்.

இப்போது இருக்கும் எல்லா மதகுருக்களும் ஆண்களே.திருத்தொண்டர்கள், பாதிரியார்களுக்கு ஒருபடி கீழான நிலையில் திருநிலைப்படுத்தப்பட்ட ஆலயப் பணியாளார்கள் ஆவர்.

ஏழு ஆண்கள் மற்றும் ஆறு பெண்கள் கொண்ட இந்த புதிய ஆணையம், திருச்சபையின் தொடக்கக் காலத்தில் திருத்தொண்டர்கள் தற்போது வகிக்கும் பணிப்பெறுப்புக்களை போல, பெண்கள் பணி செய்த வரலாறு பற்றி ஆராயும். நவீன காலத்தில் பெண் குருத்துவம் என்பது ரோமன் கத்தோலிக்கர்களுக்கு மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சனையாகவே இருந்து வந்துள்ளது.

இவ்வாண்டின் தொடக்கத்தில் இது பற்றி ஆராய ஆணையம் ஒன்றை அமைக்க தயாராக இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்திருந்தார்

Related posts: