எகிப்தியத் தீவுகளை சவுதிக்கு கொடுக்கும் உடன்பாடு செல்லாது !

Wednesday, June 22nd, 2016

செங்கடலிலுள்ள இரண்டு தீவுகளின் கட்டுப்பாட்டை சௌதி அரேபியாவுக்கு தாரைவார்க்கும் உடன்பாடு, செல்லாது என்று எகிப்திய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பைக் கேட்டவுடன், “இந்த தீவுகள் எகிப்தியருடையது” என்று மீண்டும் மீண்டும் சொல்லி, நீதிமன்றத்தில் இருந்த பலரும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஏப்ரல் மாதத்தில் சவுதி அரேபியாவிடம் அவற்றை ஒப்படைக்கும் எகிப்திய அரசின் முடிவானது, கொந்தளிப்பை உருவாக்கி, கெய்ரோவில் ஆர்ப்பாட்டங்களுக்கு வழிகோலியது. இந்த தீவுகளை எகிப்து கவனித்துக் கொள்கிறதே தவிர, அவை எப்போதும் சவுதி அரேபியாவை சேர்ந்தவைகளே என்று எகிப்திய ஆட்சியாளர்கள் வாதிட்டனர்.

அதிபர் அப்துல் ஃபத்தாக் அல் சிசி இந்த உடன்பாட்டிற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தார். எனவே, இந்த உடன்பாடு செல்லாது என்ற நீதிமன்றத் தீர்ப்பு அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: