வட கொரியாவை தாக்க தயார் – அமெரிக்கா அறிவிப்பு

Friday, July 7th, 2017

சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி ஏவுகணை பரிசோதனை செய்து வரும் வட கொரியா மீது இராணுவ தாக்குதல் நடத்த தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஏவுகணை பரிசோதனை செய்ய ஐ.நா சபை தடை விதித்துள்ள நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையை நிகழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த ஐ.நா சபை தூதரக அதிகாரியான Nikki Haley என்பவர் நேற்று அவசர ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளார்.

அப்போது, ‘எதிர்ப்புகளை மீறி ஏவுகணை பரிசோதனை செய்து வரும் வட கொரியா மீது உலக நாடுகள் தங்களது தூதரக உறவுகளை துண்டிக்க வேண்டும்.வட கொரியாவின் அத்துமீறல்களை தடுக்க உள்ள வழிகளில் அந்நாட்டின் மீதான ராணுவ தாக்குதலும் ஒன்று. அவசியம் என்றால் வட கொரியா மீதான ராணுவ தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகவே உள்ளது.

வட கொரியா நாட்டுடன் சிறந்த நட்பு நாடாக சீனா திகழ்வதுடன் அந்நாட்டுடன் வர்த்தகமும் செய்து வருவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: