கடும்போக்கு நிலைப்பாட்டை கைவிடும் டொனால்ட் டிரம்ப்!

Thursday, November 24th, 2016

ஹிலரி கிளிண்டன் மீது வழக்கு தொடுக்கப் போவதாக முன்னர் அளித்த தனது வாக்குறுதியை கைவிடவுள்ள டொனால்ட் டிரம்ப், பருவநிலை மாற்றம் குறித்த விவாதங்களில் இனி தான் திறந்த மனதுடன் செயல்படப்போவதாக தெரிவித்துள்ளார்.

இது தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் வெளிப்பட்ட கடும்போக்கு நிலைப்பாடுகளில் இருந்து அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் சற்றே தணிந்துவிட்டது போல் தோன்றுகிறது.

பல்வேறு அம்சங்கள் குறித்தும் நியுூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், கிளிண்டன் குடும்பத்தாரை தான் காயப்படுத்த விரும்பவில்லையென்றாலும், தனது பாதையில் மேலும் செல்லப் போவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிதீவிர வலது அனுதாபிகள் மற்றும் வெள்ளை இன மேலாதிக்கவாதிகளின் ஆதரவு அவருக்கு கிடைத்தது குறித்து கேட்கப்பட்டபோது, அவர்களுக்கு தான் கண்டனம் தெரிவிப்பதாகவும், அவர்களின் ஆதரவை ஒதுக்குவதாகவும் டிரம்ப் மேலும் தெரிவித்தார்.

coltkn-11-24-fr-06153650361_5042767_23112016_mss_cmy

Related posts: