முன்னாள் ஜனாதிபதி அமெரிக்காவில் கைது!

Thursday, July 18th, 2019

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜாண்ட்ரோ டோலடோ அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பெரு மற்றும் பிரேசிலை இணைக்கும் நெடுஞ்சாலைக்கான அரசு ஒப்பந்தப் பணிகளை வழங்குவதற்காக பிரேசில் கட்டுமான நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற வழக்கில் அவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுதவிர அவரது மனைவி, அவரது முன்னாள் தலைமை பாதுகாவலர், மகன் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வழக்குகளில் அலெஜாண்ட்ரோ டோலடோவை பொலிசார் தேடி வந்த நிலையில், 2017ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வரும் அலெஜாண்ட்ரோவை நாடு கடத்தும்படி அந்நாட்டு அரசுக்கு பெரு அரசு கோரிக்கை விடுத்தது.

அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட அமெரிக்க அரசு, அலெஜாண்ட்ரோவை கைது செய்தது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நாடு கடத்துவதற்கான நடைமுறைகள் தொடங்கின.

Related posts: