மலையில் மோதிய பயணிகள் விமானம் : 7 பேர் பலி!

Thursday, July 27th, 2017

மெக்சிகோவில் மலைப்பகுதியில் பயணிகள் விமானம் மோதியதில் விமானி உட்பட 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிகோவின் Tamazula நகரிலிருந்து U206 ரக சிறிய பயணிகள் விமானம் Culiacan நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

விமானத்தில் விமானி உட்பட 7 பேர் பயணம் செய்தார்கள். Sinaloa மாகாணத்தின் Imala பகுதியில் சென்று கொண்டிருந்த போது மலைப்பகுதியில் பயங்கரமாக மோதி விமானம் விபத்துள்ளானது. இந்த கோர விபத்தில் விமானி உட்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் வேறு விமானம் மூலம் சம்பவ இடத்துக்கு வந்த 7 பேரின் சடலங்களையும் மீட்டார்கள்.இரண்டு பேரின் சடலங்கள் முற்றிலுமாக எரிந்த நிலையில் இருந்துள்ளது. மீதி ஐந்து பேரின் சடலங்களின் உடல் பாகங்கள் துண்டாகி கிடந்தன.

மெக்சிகோவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மோசமான வானிலை நிலவி வருகிறது. இந்த சமயத்தில் தான் விபத்து நடந்துள்ளது.விபத்தில் உயிரிழந்த 7 பேரின் விவரங்களை தகவல்தொடர்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related posts: