சர்வாதிகாரியின் மகள் விஷம் வைத்து கொலை?

Wednesday, November 23rd, 2016

முன்னாள் உஸ்பெகிஸ்தான் சர்வாதிகாரியின் மகளும் பெரும் செல்வந்தருமான Gulnara Karimova விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உஸ்பெகிஸ்தான் நாடு விடுதலை அடைந்த 1999 ஆம் ஆண்டில் இருந்து அந்த நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று, பின்னர் சர்வாதிகார ஆட்சியை நடத்தியவர் இஸ்லம் கரிமோவ்.

இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த இஸ்லம் கரிமோவின் மறைவுக்கு பின்னர் உஸ்பெகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக அதுவரை இளவரசி போன்று ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வந்த Gulnara Karimova சிறையில் தள்ளப்பட்டார்.

தொடர்ந்து பல மாதங்கள் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாயின. ஆனால் அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இல்லை அவரை இஸ்ரேல் நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் 44 வயதான Gulnara Karimova கடந்த 5-ஆம் திகதி விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதாகவும், அவரது உடலை தலைநகர் தாஷ்கண்டில் புதைத்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவல்கள் எதற்கும் தற்போதைய ஜனாதிபதி ஷவுகத் மிர்சியோவிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை என்று கூறப்படுகிறது.கொல்லப்பட்டதாக கருதப்படும் Gulnara தொடர்பான தகவல்களை வெளியிட்டு வந்த இணையத்தளம் ஒன்று குறித்த தகவல்களை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் கல்வியை முடித்த Gulnara ஜூடோ தற்காப்பு கலையில் சிறப்பு பயிற்சி பெற்றவர். வெளிவிவகாரத்துறையில் சிறந்து விளங்கிய இவர் சிறந்த பாடகர், மொடல், ஆடை வடிவமைப்பாளர் மட்டுமின்றி உஸ்பெகிஸ்தான் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக முன்னிறுத்தப்பட்டவர்.

மத்திய ஆசியாவில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணியாக திகழந்த Gulnara கரிமோவாவுக்கு பிரித்தானிய அரச குடும்பத்துடனும் நெருங்கிய தொடர்பு இருந்தது. மட்டுமின்றி மேற்கத்திய நாடுகளிலும் அவர் செல்வாக்கு பெற்றவாரக திகழந்தார்.இருப்பினும் பல ஊழல் வழக்குகளிலும் Gulnara பெயர் அடிபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1) - Copy

Related posts: