மக்களின் உரிமைகள் தொடர்பில் தெரேசா மே மறுபரிசீலனை செய்ய வேண்டும்

Friday, August 4th, 2017

பிரித்தானியாவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளின் உரிமைகள் குறித்து பத்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அத்துடன் பிரெக்சிற்றால் உயர்கல்வியில் பாதிப்பு ஏற்படாது என்பதை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒக்ஸ்ஃபோர்ட், கேம்பிறிஜ்ட் மற்றும் இலண்டன் உள்ளிட்ட 24 பல்கலைக்கழகங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.

தெரேசா மேயின் தற்போதைய அணுகுமுறை பொருளாதாரத்தில் வருடத்திற்கு 73 பில்லியன் பவுண்ட்ஸ்களை உருவாக்கும் துறையை பாதிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பிரெக்சிற்றுக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் உரிமைகள் தொடர்பான திட்டங்களை தெரேசா மே மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: