ஆங்கில நாள்காட்டியை பின்பற்றி ஊதியம் வழங்க சவுதி அரசு முடிவு!

Monday, October 3rd, 2016

புதிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் ஒருகட்டமாக சவுதி அரேபியா நாட்டின் அரசு பணியாளரகளுக்கு இனி இஸ்லாமிய நாள்காட்டிக்கு பதிலாக ஆங்கில காலண்டரை பின்பற்றி சம்பளம் வழங்க சவுதி அரசு தீர்மானித்துள்ளது.

ஆங்கில நாள்காட்டியின்படி, பெப்ரவரி நீங்கலாக இதர 11 மாதங்களும், 30 அல்லது 31 நாட்களை கொண்டுள்ளன. ஆனால், 12 மாதங்களை கொண்ட இஸ்லாமிய நாள்காட்டியின்படி, முதல்பிறை தென்பட்ட நாளின்பின் பிறக்கும் ஒவ்வொரு மாதத்திலும் 29 அல்லது 30 நாட்களே உள்ளன.

எனவே, அதிகமான வேலை நாட்களை கொண்ட ஆங்கில நாள்காட்டியின்படி அரசு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க தீர்மானித்துள்ள சவுதி அரேபியா இந்த புதியநடைமுறையை நேற்று முன்தினத்தில் (1) இருந்து நடைமுறைப்படுத்தியுள்ளதாக சவுதி நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

201610031521166845_Saudi-Arabia-Abandons-Islamic-Calendar-For-Government-Pay_SECVPF

Related posts: