தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை!

Monday, September 18th, 2017

மியன்மாரிலிருந்து  வந்து குவிந்திருக்கும்  அகதிகளின் நடமாட்டங்களை  பங்களாதேஷ் அதிகாரிகள் கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுகாதார அதிகாரிகள் , இங்குள்ள ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு நோய்கள் தொற்றாதிருக்க தடுப்பூசி ஏற்றும் பணிகளை அவர்கள் தங்கியுள்ள முகாம்களில் ஆரம்பித்துள்ளார்கள்  . பங்களாதேஷின் பிரதமர் . மயன்மாரின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்து , ஐநாவின் உதவி கோரி , அமெரிக்கா பயணமாகி இருக்கிறார் .

அடுத்த 7நாட்களுக்குள் 150,000  பிள்ளைகளுக்கு  போலியோவுக்கான தடுப்பூசி ஏற்ற,  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்று உயர் மருத்துவ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார் . ஏற்கனவே உள்ள இரண்டு முகாம்கள் அகதிகளால் நிரம்பி வழிவதால் , புதிதாக வருபவர்கள் , பாடசாலைகளிலோ அல்லது  திறந்த வெளிகளில் உள்ள தற்காலிக வதிவிடங்களிலோ விடப்படுகிறார்கள் .  மலசல கூட வசதிகள் இல்லாத அவல நிலையில் இவர்கள் இருக்கிறார்கள் . பக்கத்திலுள்ள நகர்ப்புறங்களுக்குள் படையெடுக்காமல் இருக்க , இவர்கள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் பொலிசார் இறங்கி உள்ளனர் .

மியன்மார் அரசு . நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துள்ளார்கள் என்றும் , இவர்களில் அநேகமானவர்கள் பயங்கரவாதிகள் என்றும் முத்திரை குத்தி உள்ளார்கள் . நாட்டை விட்டு தப்பியோடும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் , தங்கள் வீடுகளை தாங்களே அழித்து விட்டு செல்கிறார்கள் என்று அரசு குற்றம்சாட்டுகிறது

Related posts: