மன்னிப்பு கடிதம் எழுதி தர இம்ரான்கானுக்கு உத்தரவு!

Friday, August 10th, 2018

‘தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய இம்ரான் கான், மன்னிப்பு கடிதம் எழுதி தர வேண்டும்’ என, பாக்., தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அண்டை நாடான பாகிஸ்தானில், சமீபத்தில் பொதுத் தேர்தல் நடந்தது.

இதில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.ஆனாலும், பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், இம்ரான் கானின், தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில், இம்ரான் கான், இஸ்லாமாபாத் தொகுதியில் ஓட்டுப் போட்டபோது, மறைவான இடத்தில் ஓட்டை பதிவு செய்யாமல், தேர்தல் அதிகாரி மேஜையில் வைத்தே, ஓட்டுப்பதிவு செய்தார்.

இந்தக் காட்சி, ஊடகங்களில் வெளியானதை அடுத்து, சர்ச்சை ஏற்பட்டது. ‘தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய இம்ரான் கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.இதையடுத்து, அந்த தொகுதியில் தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இந்த புகாருக்கு, இம்ரான் கான், வழக்கறிஞர் மூலம் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை’ என, தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

‘தேர்தல் விதிமுறையை மீறியதற்காக, இம்ரான் கான், எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பெரும்பான்மை இல்லாததால், ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வரும் இம்ரான் கானுக்கு, தேர்தல் ஆணைய உத்தரவு, மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது

Related posts: