குடியேற்றவாசிகள் தொடர்பில் ஸ்கொட்லாந்துக்கென தனியான உடன்படிக்கை!

Wednesday, February 8th, 2017

பிரெக்சிற்றின் பின்னர் ஸ்கொட்லாந்துக்குள் உள்வாங்கப்படும் குடியேற்றவாசிகள் குறித்து தனியான உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்பட அனுமதி வேண்டும் என, ஐரோப்பிய விவகாரங்களுக்கு பொறுப்பான  ஸ்கொட்லாந்து குழு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியமையின் பின்னர், அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் அக்கறை செலுத்தப்படும் என பிரித்தானிய அரசாங்கம் உறுதியளித்திருந்த நிலையிலேயே மேற்குறித்தவாறு ஸ்கொட்லாந்து கோரியுள்ளது.

பிரெக்சிற்றின் பின்னர், ஐரோப்பிய தொழிலாளர்கள் ஸ்கொட்லாந்துக்குள் உள்வாங்கப்படுவது தடுக்கப்பட்டால் ஸ்கொட்லாந்தின் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்கும் எனவும் ஸ்கொட்லாந்து கூறியுள்ளது.

ஏனெனில், ஸ்கொட்லாந்தில் உள்ள பல நிறுவனங்களில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து வந்த தொழிலாளர்களே பெருமளவில் பணி புரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த பிரித்தானிய நாடாளுமன்ற அமைச்சர்கள், முழு பிரித்தானியாவுக்கும் சாதகமான வகையில் குடியேற்றவாசிகள் தொடர்பான உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதிலேயே அக்கறை செலுத்தப்பட்டு வருகின்றது என தெரிவித்திருந்தனர்.

skotland

Related posts: