சோமாலியாவில் கடும் வறட்சி..! 4 மில்லியன் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறி…!!

Wednesday, January 18th, 2017

சோமாலியாவில் நிலவி வருகின்ற மிகவும் மோசமான வறட்சியால் சுமார் 4 மில்லியன் மக்களின் வாழ்க்கை ஆபத்திற்கு உள்ளாகி இந்த பிரச்சனையை சமாளிக்க 850 மில்லியன் டாலர்களுக்கு மேலாக தேவைப்படுவதாக ஐ.நா. மனிதநேய விவகார பணிகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்து பருவமழை அங்கு பொய்த்து போனதாலும், சில சமூகங்கள் இடம்பெயரவும், சேவைகள் வழங்குவதை பாதிக்கவும் செய்த மோதல்களாலும் அங்கு மனிதநேய சூழ்நிலை மோசமாகியுள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் நிலவிய பஞ்சத்தால் சோமாலியாவில் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் இறந்தனர்.ஆரம்ப கட்டத்திலேயே நடவடிக்கை எடுப்பதே இன்னொரு பேரழிவை முறியடிக்கவும் , படிப்பினைகள் பெறப்பட்டுவிட்டன என்பதைக் காட்டவும் உள்ள ஒரே வழி என்று சோமாலியாவுக்கான ஐநா உதவியின் சிறப்பு பிரதிநிதி பெய்றர் டி கிளேர்க் தெரிவித்திருக்கறார்.

_93636583_gettyimages-629939442

Related posts: