சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்காவின் துணை ஜனாதிபதி !

Friday, May 12th, 2017

அமெரிக்காவில் சிறுவன் ஒருவன்  அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தன்னிடம் மன்னிப்புக்கோரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட சுவாரஷ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராணுவத்தினரின் பாராட்டு நிகழ்வு நடைபெற்ற வேளை, சிறுவர்களுடன் அளவளாவிய பென்ஸ் தவறுதலாக அந்தச் சிறுவனை இடித்து விட்டதாலேயே தன்னிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளான்.

வாஷிங்டனில் உள்ள ஐசனோவர் எக்ஸிக்யூடிவ் அலுவலக கட்டிடத்தில் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனைத்து சிறார்களுக்கும் பென்ஸ் நன்றி தெரிவித்துக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுவர்களுடன் கைகுலுக்கியும், அவர்களை அணைத்தும், தூக்கியும் அளவலாவிக் கொண்டிருக்கையில் சிறுவன் “ என்னிடம் நீங்கள் மன்னிப்புக் கோரவேண்டும் “ என்று தெரிவித்துள்ளமை கமராக்களில் பதிவாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து – நான் வேண்டுமென்றே உன்னை இடிக்கவில்லை . அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் என்று பென்ஸ் அந்த சிறுவனை சமாதானம் செய்துள்ளார்.

Related posts: