சிரியா விவகாரம்: அமெரிக்கா ரஷ்யாவிற்கிடையில் வலுக்கும் மோதல் !

Saturday, April 8th, 2017

சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன குண்டுத் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் மோதல் நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிரியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்நிலையில், ஒருதலை பட்சமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலையடுத்து சிரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிரியா யுத்த விமானங்களே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கூறியுள்ளன. ஆனால், தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.

இவ்வாறான நிலையில், சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது எல்லை மீறிய தாக்குதல் என அமெரிக்க ஜனாதிபதி டொலால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “சிரியா மீதும், சிரியா ஜனாதிபதி மீதுமான எனது நிலைப்பாடு முற்றிலும் மாறியுள்ளதாக” குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹேலி,

“சிரியா விவகாரத்தில் இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய நாடுகள் தொடர்ந்தும் தோல்வியடையுமாயின், நாடுகளை பொறுத்தவரை சொந்த நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்

சிரியாவில் இடம்பெற்று வரும் நெருக்கடிளை தீர்க்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும். அவ்வாறு இல்லையேனில் வேறு விதமான முடிவுகளை எடுக்க நேரிடும்

இந்த விடயம் தொடர்பில் ரஷ்யா கவனத்தில் எடுப்பதற்கு இன்னும் எத்தனை குழந்தைகளை பலிகொடுக்க வேண்டும்.

சிரியா மீது ரஷ்யா ஆதிக்கத்தை செலுத்துவதாக தெரிவிப்பது உண்மையானால் அது வெளிப்படுத்தப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2013ஆம் ஆண்டு சிரியா மீது பாரியளவு இரசாயன தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது சிரியா மீது தாக்குதல் நடத்தவோ, படையெடுப்பு நடத்தவோ கூடாது என முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.மேலும், தேர்தல் பிரிச்சாரத்தின் போதும் சிரியா ஜனாதிபதிக்கு ஆதரவாக ட்ரம்ப் குரல்கொடுத்து வந்தார். எனினும், அந்த நிலையில், இருந்து தற்போது முற்றிலும் மாறுபட்ட எண்ணத்தை ட்ரம்ப் வெளிப்படுத்தியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Related posts: