அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – டிரம்ப்பின் உதவியாளருக்கு 47 மாதம் சிறை தண்டனை!

Saturday, March 9th, 2019

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நடந்த முறைகேடு தொடர்பாக டிரம்ப் உதவியாளருக்கு 47 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் விவகாரத்தில் டிரம்ப் வெற்றியில் ரஷியா தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அது குறித்து அதிபரின் சிறப்பு கவுன்சில் விசாரணை ராபர்ட் முல்லர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் பிரசார குழு அமைத்து இருந்தார். அதில் 6 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டிருந்தவர்களில் பால்மனா போர்ட்டும் ஒருவர். இவர் டிரம்பின் உதவியாளராகவும் இருந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் பால்மனாபோர்ட்டுக்கு 47 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இவர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக உக்ரைன் அரசியல்வாதிகளிடம் இருந்து 55 மில்லியன் டாலர் பணத்தை பெற்று வரி ஏய்ப்பு மற்றும் வங்கி மோசடி செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக உக்ரைன் அரசியல்வாதிகளுக்காக பணியாற்றியதாகவும், தனக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் மறுத்தார்.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி அவருக்கு 47 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Related posts: