கட்டுப்பாடுகளைத் தளர்த்திய அமெரிக்கா..!

Wednesday, September 20th, 2017

அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்வதற்கு வழங்கப்படும் எச் 1 பி விசாவுக்கு விதித்திருந்த தடையை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றவுடன் வெளிநாட்டினவருக்கு வழங்கப்படும் எச்1 பி விசா வழங்குவதற்கு கட்டுப்பாடுகளை விதித்தார்.டொனால்டு ட்ரம்பின் இந்தச் செயல் உலக நாடுகளுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.குறிப்பாக, இந்தச் கட்டுப்பாட்டால், ஐ.டி துறையைச் சேர்ந்த இந்தியர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில், எச்1 பி விசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க அரசு தளர்த்தியுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தடைவிதிக்கப்பட்டதிலிருந்து ஏராளமானோர் எச்1 பி விசாவுக்கு விண்ணப்பித்திருந்தனர்.எச்1 பி விசாவுக்கு விண்ணப்பித்து 15 நாள்களுக்குள் விசா வழங்கப்படும். அப்படி வழங்கவில்லை அதற்கான செலவுத் தொகை திரும்ப அளிக்கப்படும் என்று அமெரிக்க குடிவரவு சேவைக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.ஏற்கெனவே விசாவுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே தற்போது விசா வழங்கப்படும்.புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு விசா வழங்கப்படாது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Related posts: