நாளாந்தம் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பேஸ்புக் பாவனையாளர்கள் சாவு!

Wednesday, September 21st, 2016

ஒவ்வொரு நாளும் உலகின் மொத்த சனத்தொகையில் 150,000 க்கும் அதிகமானோர் மரணமடைகின்ற நிலையில், இவர்களில் ஆகக்குறைந்தது 10,300 பேர் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர பேஸ்புக் குறித்த மேலும் சில புள்ளிவிபரங்கள், உலகெங்கும் 1.71 பில்லியன் பேர் ஒவ்வொரு மாதமும் பேஸ்புக் பயன்படுத்தும் அதேநேரம் 1.13 பில்லியன் பேர் ஒவ்வொரு நாளும் பயன்படுத்துகின்றனர்.

பேஸ்புக்கில் 83 மில்லியன் Fake Profiles-போலிக்கணக்குகள் உள்ளன.(Source: CNN) தினமும் 300 மில்லியன் போட்டோக்கள் புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன18 -24 வயதான பேஸ்புக் பாவனையாளர்களில் 50 வீதமானவர்கள் காலை எழுந்தவுடன் செய்யும் முதல் வேலை தமது பேஸ்புக்கைப் பார்வையிடுவதுதான்.

பேஸ்புக்கில் ஒவ்வொரு நிமிடமும் 510 Comments பதிவிடப்படும் அதேநேரம் 293,000 Status Update செய்யப்படுகின்றனஒப்பீட்டளவில் அதிகளவானோர் பிற்பகல் 1 – 3 மணிவரையான காலப்பகுதிக்குள் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்.

பலர் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலேயே அதிக நேரத்தை பேஸ்புக்கில் செலவிடுகின்றனர். இந்தப் பதிவை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் 10 பேஸ்புக் பாவனையாளர்கள் மரணித்திருப்பார்கள் என்கிறது புள்ளிவிபரம்.

facebook-inc-news-feed

Related posts: