அணுகுண்டை தாங்கிச் செல்லும் ஏவுகணை இந்தியா ரகசிய சோதனை!

Friday, April 15th, 2016

நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணுகுண்டை தாங்கிச் செல்லும் ஏவுகணையை இந்தியா சோதித்து பார்த்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் கடற்கரையிலிருந்து 45 கடல் மைல் தொலைவில் வங்காள விரிகுடா கடலில் ஐஎன்எஸ் அரிஹந்த் நீர் மூழ்கி கப்பலில் இருந்து இந்த சோதனை கடந்த 31ம் திகதி நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதற்காக உள்நாட்டிலேயே கே-4 என்ற ஏவுகணை தயாரிக்கப்பட்டதாகவும் அதன் முனையில் அணுகுண்டுக்கு பதிலாக டம்மி குண்டு பொருத்தப்பட்டு சோதிக்கப்பட்டதாகவும், கடலுக்கு அடியில் 20 மீற்றர் ஆழத்திலிருந்து ஏவுகணை விண்ணில் சீறிப்பாய்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த சோதனை முழுவதும் ரகசியமாக செய்யப்பட்டுள்ளது. இந்த வகை ஏவுகணைகள் 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட அணுகுண்டை தாங்கி சென்று 3500 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இலக்கையும் தாக்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய திறன் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற ஒரு சில நாடுகளுக்கே உள்ள நிலையில் தற்போது இந்த வரிசையில் இந்தியா இனைந்துள்ளது.

Related posts: