அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தில் 500 பணி இழப்புகள்

Tuesday, March 29th, 2016

சர்வதேச ஊடக நிறுவனமான அல்-ஜசீரா எறத்தாள 500 பணியிடங்களை நீக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அல் ஜசீராவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கத்தாரிலேயே அனேகமான பணியிழப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும். உலகின் மற்ற இடங்களிலும் பல பணியிழப்புகள் ஏற்பட வாய்ப்பள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

‘ஊழியர்களின் வினைத் திறனை மேலும் அதிகரிப்பதை நோக்காகக் கொண்டே’ இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அல் ஜசீரா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியாக எண்ணெயின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, கத்தார் அரசாங்கம் அல்-ஜசீராவிற்கு வழங்கும் நிதியை குறைந்துள்ளதாக ஊடகங்கள் தொடர்பான ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் உள்ள தமது கிளையை மூட உள்ளதாக அல்-ஜசீரா அறிவித்து இரண்டு மாதங்களில் இந்த அறிவிப்பும் வந்துள்ளது.அமெரிக்காவின் பிரபல ஊடகவியலாளர்கள் பலரை சேர்ப்பதற்காக பல மில்லியன் டாலர் பணத்தை அல் ஜசீரா செலவிட்டிருந்தது.

ஆனால், அதன் செய்தி நிகழ்ச்சிகளுக்கு போதியளவு நேயர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. 1996-ம் ஆண்டில், கத்தார் அரசாங்கத்தின் நிதியுதவில் நிறுவப்பட்ட அல்-ஜசீரா செய்தி ஊடகத்துக்கு உலகெங்கிலும் 70க்கும் அதிகமான அலுவலகங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: