ஸ்காட்லாந்து விடுதலைக்கு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு –  ஸ்காட்லாந்து முதன்மை அமைச்சர் ஸ்டர்ஜன்!

Tuesday, March 14th, 2017
ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து சுதந்திரம் பெற்று தனி நாடாகும் நோக்கில் புதியதொரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அதிகாரம் பெற விரும்புவதாக ஸ்காட்லாந்து முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் அறிவித்துள்ளார்..
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஜக்கிய ராஜ்ஜியம் வெளியேறுவதற்கு முறையான நடவடிக்கைகளை தொடங்குகின்ற வரைவு மீது வாக்கெடுப்பு நடத்த பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தயார் செய்து வருகையில் ஸ்டர்ஜன் இவ்வாறு அறிவித்திருக்கிறார்.
பிரிட்டிஷ் அரசு அதனுடைய விட்டுக்கொடுக்காத தன்மையால் வீணாகி போவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேறுவதை ஸ்காட்லாந்து ஏற்றுக்கொண்டாலும், ஐரோப்பிய ஒன்றிய ஒற்றைச் சந்தையிலிருந்தும் பிரிட்டன் வெளியேறுவதை ஸ்காட்லாந்து விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக நாடாளுமன்றம் முடிவு செய்வது ஏற்க முடியாததாக அமையும் என்று கூறி பிரெக்ஸிட் வரைவுக்கு ஆதரவு அளிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு பொறுப்பான பிரிட்டன் அமைச்சர் டேவிட் டேவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இந்த வரைவை இன்று மாலை நிறைவேற்றிவிட்டால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முறையான செயல்முறையை செவ்வாய்க்கிழமையே பிரதமர் தெரீசா மே தொடங்குவார் என்று தெரிகிறது.

Related posts: