கொரோனா தொற்று: இதுவரை 70 ஆயிரத்து 530 பேர் உயிரிழப்பு!

Tuesday, April 7th, 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 12 இலட்சத்து 87 ஆயிரத்து 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 70 ஆயிரத்து 530 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் கூறுகின்றன..

இதேவேளை சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று வரையிலான காலப்பகுதியில் அறிகுறி எதுவும் வெளிப்படாத நிலையில், 78 நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக  சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது

தொற்றுக்கான அறிகுறிகள் அற்ற நிலையில் உள்ளவர்கள் உயிர்கொல்லி நோயினை பரப்புவது, தற்போது அரசாங்கத்திற்கு பெரும் பிரச்சனையை தோற்றுவித்துள்ளதாக தேசிய சுகாதார ஆணையகத்தின் பேச்சாளர் மீ பெங் தெரிவித்துள்ளார்.

தொற்றிற்கு அதிக அளவில் பாதிப்படைந்த நாடாக சீனா திகழ்ந்த போதிலும், பின்னர் அதனை பாரிய அளவில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதில் வெற்றி பெற்றிருந்தது. ஆரம்பத்தில் ஹூபி மாகாணத்திலேயே உயிர்கொல்லி தொற்று பாரிய அளவில் பரவியது.

தற்போது அதே மாகாணத்தில் 705 பேர் மொத்தமாக நோய் அறிகுறிகள் அற்ற நோயாளர்களாக சுகாதார நிபுணர்களால் அவதானிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேவேளை, இதுவரை, 81 ஆயிரத்து 708 பேர் தொற்றுக்கு உள்ளான நிலையில் 3 ஆயிரத்து 331 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: