கொரோனா வைரஸ் : 7000 குற்றவாளிகள் விடுதலை !

Thursday, March 12th, 2020

கொரோனா வைரஸ் பீதியால் ஈரான் அரசு 70,000 கைதிகளை விடுதலை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பீதி அதிகரித்து வருகின்றது. இதனால், மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் பல முன்னெடுத்திருந்தாலும் அதன் பாதிப்பை கட்டுக்கொள் கொண்டுவர உலக நாடுகளால் இயலவில்லை.

கொரோனா அதிகம் தொற்றிய நாடுகளில் ஒன்றான ஈரானில், இதுவரை 237 பேர் பலியாகியுள்ள சூழலில், நேற்று மட்டும் 43பேர் பலியாகியுள்ளனர். மேலும், 7,161 பேருக்கு இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஈரான் அரசு சிறை கைதிகளுக்கு கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டால் மொத்த சிறையும் பாதிக்கப்படும் என்று அஞ்சி 70,000 கைதிகளை விடுதலை செய்ய உள்ளது.

இதில் நீதிதுறையின் முடிவுபடி 70, 000 கைதிகள் விடுதலையாக உள்ளனர். அவர்கள், தற்காலிகமாக விடுதலையாகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுக்குள் வந்தபின் இவர்கள் சிறைக்கு திரும்புவார்களா என்பது குறித்த எந்த தகவலும் அறிக்கப்படவில்லை. எனினும், அரசியல் சார்ந்து குற்றங்கள் இளைத்த கைதிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: