பொதுத் தேர்தலை மீண்டும் நடத்துங்கள்: பாங்களாதேஷ் எதிர்கட்சிகள் கோரிக்கை !

Monday, December 31st, 2018

பாங்களாதேஷில் இடம்பெற்ற பொது தேர்தலை மீண்டும் நடத்துமாறு எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தேர்தலின் போது, தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தே, எதிர்கட்சிகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.

பங்களாதேஷில் பொது தேர்தல் குறித்து வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளுக்கு அமைய முன்றாவது முறையாக பொது தேர்தலில் போட்டியிட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா (Sheikh uasina) முன்னிலையில் உள்ளார்.

வெளியாகியுள்ள தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய, 281 தொகுதிகளில் அவரின் கட்சி முன்னிலையில் உள்ளதாக பங்களாதேஷ் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

Related posts:

அவர் பொய் சொன்னார் - நாங்கள் முடிவற்ற யுத்தத்தில் சிக்குண்டோம் - கொலின் பவலின் மரணத்தின் பின்னர் ஈரா...
எமக்கு உதவ யாருமில்லை ; 18 - 6- வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறதடை - வேதனை வெளியிட்ட உக்ரைன் அதிபர...
காசா பகுதிக்கு வழங்கும் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை துண்டித்தமை இஸ்ரேலின் மோசமான செயல் - மலேசி...