எமக்கு உதவ யாருமில்லை ; 18 – 6- வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறதடை – வேதனை வெளியிட்ட உக்ரைன் அதிபர்!

Friday, February 25th, 2022

 உக்ரைனில் ரஷ்யா தாக்குதலில் 137 பேர் பலியாகி உள்ளதாகவும் ரஷியாவுக்கு எதிராக தனிந்தனியாக போராடி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வேதனை வெளியிட்டுள்ளார்.

ரஷ்ய படையை எதிர்த்து உக்ரைன் ராணுவத்துக்கு துணையாக நிற்க 10 ஆயிரம் தானியங்கி இயந்திர துப்பாக்கிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ரஷியாவிடம் இருந்து உக்ரைனைக் காக்க அதற்கு முன், அந்நாட்டு இராணுவ அதிகாரி தனது மகள் மற்றும் மனைவியிடம் விடைபெறும்போது கண்ணீர் விட்டு கதறி அழுததாக கூறப்படுகின்றது.

உக்ரைன் தலைநகர் கிவ்-வில் பலத்த சத்ததுடன் குண்டு வெடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் கீவ்வில் இருந்து கிராமங்களை நோக்கி கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கீவ் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்து உள்ள நிலையில், குண்டுவீச்சில் குடியிருப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன. அதில் இருந்தவர்கள் படுகாயமடைந்து உள்ளனர்.

இனிமேல் நிலைமை என்னவாகுமோ என்ற அச்சத்தில் மக்கள் ஏடிஎம் மையங்களிலும், கடைகளிலும் குவிந்துள்ளனர். இதனிடையே உக்ரைனில் நுழைந்து தாக்குதல் நடத்திய ரஷியா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா.

மேலும் பொருளாதார தடையை விதித்ததற்காக ரஷியா சைபர் தாக்குல் நடத்தினால் எதிர்கொள்ள தயார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

இதேவேளை ரஷ்ய- உகரை மோதனை அடுத்து 18 – 6- வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: