வியட்நாம் ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம்!

Saturday, May 13th, 2017

வியட்நாம் ஜனாதிபதி டிரான் டாய் குவாங்கின் சீன விஜயம் இருநாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவை வலுப்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று (வியாழக்கிழமை) சீனா சென்றுள்ள வியட்நாம் ஜனாதிபதி பீஜிங்கில்  சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையிலான அரசியல் நிலமைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை சீன வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகளையும் வியட்நாம் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது தென்சீன கடற்பிராந்திய விவகாரம் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும், சில விடயங்கள் சாதகமாக அமைந்திருந்ததாகவும் சீன வெளியுறவு அமைச்சர் லியு ஜெனின் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை தொடரவும், கடல்வழி ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தவும், பெய்பு வளைகுடாவில் கூட்டு ஆராட்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்புக்களை அதிகரிக்கவும் இணக்கம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வியட்நாம் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள டிரான் டாய் குவாங் எதிர்வரும் 14 மற்றும் 15 திகதிகளில் நடைபெறவுள்ள ஊழலுக்கு எதிரான மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: