காசா பகுதிக்கு வழங்கும் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை துண்டித்தமை இஸ்ரேலின் மோசமான செயல் – மலேசியா குற்றச்சாட்டு!

Thursday, October 12th, 2023

காசா பகுதிக்கு வழங்கும் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை துண்டித்தமை இஸ்ரேலின் மோசமான கொடுமையான செயல் என மலேசியா குற்றம் சாட்டியுள்ளது.

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் அநீதியே நெருக்கடிக்கு காரணம் என்றும் மலேசியா குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் பாலஸ்தீனியர்களுக்கு உதவ மலேசிய அரசாங்கம் 212,000 டொலர் அவசர நிதி உதவியை வழங்குவதாக மலேசிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேநேரம் மோதலில் சிக்கியுள்ள ஒரு மலேசிய மருத்துவர் மற்றும் அவரது மூன்று குழந்தைகளை வெளியேற்றுவதற்கான திட்டங்கள் நடந்து வருவதாகவும் மலேசிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

23 மலேசியர்கள் மற்றும் சிங்கப்பூர் நாட்டவர்கள் அடங்கிய குழு கடந்த செவ்வாய்க்கிழமை எகிப்துக்குப் பாதுகாப்பாக சென்றுள்ளதாக மலேசிய வெளிவிவகார அமைச்சர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: