பேஸ்புக் பதிவால் சர்ச்சை : கவிழும் நோர்வே அரசு ?

Wednesday, March 21st, 2018

நோர்வே எதிர்க்கட்சி பற்றி பேஸ்புக்கில் பெண் கருத்துத் தெரிவித்த வேளையில் அரசு மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது ஜரோப்பிய நாடான நேர்வேயின் பிரதமர் எர்னா சொல்பெர்க் தலiமையில் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நடக்கின்றது .

இந்த நிலையில் அரசியல் அங்கம் வகிக்கும் நீதித்துறை பெண் அமைச்சர் சில்வி விஸ்தாக் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்தார். அதில் 2011 ஆம் ஆண்டில் தொழிலாளர் கட்சியின் அன்டர்ஸ் பெக்ரிங் பிரிவிக் தலமையில் இருந்த ஆட்சித் தீவிர வாதிகள் மீதான தாக்குதல் என்ற பெயரால் இளைஞர்கள் முகாமின் மீது தாக்குதல் நடத்தியது எனத் தெரிவித்திருந்தார்

இது தொழிலாளர் கட்சிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது அதனால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து அமைச்சர் சில்வி லிஸ்தாக் பேஸ்புக்கில் பதிவு செய்திருந்த தனது கருத்தை நீக்கி விட்டார் இருந்தும் தொழிலாளர் கட்சியின் கோபம் தணியவில்லை. நீதித்துறை அமைச்சர் சில்வி லிஸ்தாக் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்துள்ளது. அப் பிரேரணை வெற்றி பெற்றால் அரசு விழும் அபாயத்தில் உள்ளது.

Related posts: