கடலில் விழுந்த ஈஜிப்ட்ஏர் விமானத்தின் பாகம் கண்டெடுப்பு!

Friday, June 17th, 2016

கடந்த மாதம் மத்திய தரைக்கடலில் நடந்த விமான விபத்தை விசாரித்து வந்த எகிப்திய குழு விமானத்தின் , விமானிகள் அறை உரையாடல் பதிவுக் கருவியை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட கருவி சேதமாகியுள்ளது என்றும் அதை கடலின் தரைப் பகுதியில் இருந்து மீட்க கவனமாக பல கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் தேடும் குழு தெரிவித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, பிரெஞ்சு கடற்படை கப்பலால் அந்த விமானத்தின் பறத்தல் பதிவு செய்யும் கருவி ஒன்றில் இருந்து சமிக்ஞைகள் கிடைத்தன. இந்த ஏர் பஸ் விமானமான ஈஜிப்ட்ஏர் 804ல் 60 பேர் பயணம் செய்தனர். அது பாரிசில் இருந்து கெய்ரோவிற்கு சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

160616142321_egypt_air_black_box_640x360_epa_nocredit

Related posts: