பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்க அரசு ஆலோசனை!

Wednesday, May 23rd, 2018

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவையினால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இந்தியாவில் பாரியளவு உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், அதில் இருந்து சாமானிய மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் எந்த வரி குறைப்பையும் இதுவரை செய்யவில்லை.

சென்னையில் நேற்று(22) 1L பெட்ரோல் விலை 79.79 ரூபாவாகவும், 1L டீசல் விலை 71.87 ரூபாவாகவும் இருந்தது.

நாட்டிலே மிகக்குறைவான விலை என்றால் அது டெல்லி விலை தான். அங்கு நேற்று(22) 1L பெட்ரோல் விலை 76.87 ரூபா, 1L டீசல் விலை 68.08 ரூபா ஆகும்.

மாநிலத்துக்கு மாநிலம் பெட்ரோல், டீசல் விலை மாறுபடும். இதற்கு மாநில அரசுகள் விதிக்கிற உள்ளூர் வரி அல்லது மதிப்பு கூட்டு வரி தான் காரணம் ஆகும். மத்திய அரசைப் பொறுத்த வரையில் 1L பெட்ரோலுக்கு 19.48, 1L டீசலுக்கு 15.33 உற்பத்தி வரியாக விதிக்கிறது.

இது பற்றி மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது; பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது அரசுக்கு நெருக்கடியான சூழல் ஆகும். இதற்கு கூட்டு நடவடிக்கை தேவைப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு பற்றி பெட்ரோலியம் அமைச்சகத்துடன் நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறதாக தெரிவித்திருந்தார்.

Related posts: