அல்ஜசீராவின் ஊடகபணிகளை தடை செய்தது இஸ்ரேல் – சோதனை நடவடிக்கைகளையும் மன்னெடுத்துள்ளதாக தெரிவிப்பு!

Monday, May 6th, 2024

இஸ்ரேலில் அல்ஜசீராவின் ஊடகபணிகளை தடை செய்துள்ள பெஞ்சமின் நெட்டன்யாகுஅரசாங்கம் அல்ஜசீராவின் இஸ்ரேலிய அலுவலகத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேலில் அல்ஜசீராவின் ஊடக செயற்பாடுகளை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானத்தின் படி அல்ஜசீராவின் ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன என இஸ்ரேலின் செய்மதி தொலைக்காட்சியான யெஸ் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்புகள் வெளியான சில மணிநேரங்களில் ஜெரூசலேத்தின் அம்பாசடர் ஹோட்டலில் உள்ள அல்ஜசீரா அலுவலகத்திற்கு சென்ற இஸ்ரேலிய பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஊடக பணிக்காக பயன்படுத்தப்படும் சில கருவிகள் சாதனங்களை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேலின் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அல்ஜசீரா அலுவலகத்திற்குள் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையி;ல ஈடுபடுவதை பிபிசி செய்தியாளர்கள் பார்வையிட்டனர் ஆனால் அவற்றை வீடியோவில் பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என பிபிசி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: