பேருந்து மின்கம்பத்தில் மோதியதால் 17 பேர் பலி!

துருக்கி நாட்டின் இக்டிர்-கார்ஸ் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் குறைந்தது 17 பேர் பலியானதுடன் 36 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்ட விரோதமான முறையில் ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் பயணித்த பேருந்து மின் கம்பம் ஒன்றுடன் மோதியதாலேயே தீப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
14 ஆசனங்களைக் கொண்ட குறித்த பேருந்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 50 இற்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் துருக்கியில் அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாகவும், கடந்த ஆண்டு மட்டும் வீதி விபத்துகள் காரணமாக 3 ஆயிரத்து 530 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுவாதி வழக்கில் திடீர் திருப்பம் ! அவரது குடும்பத்தினரே சுவாதியை கொலை செய்தனர் !!
மன்னிப்புக் கோரினார் மார்க்!
இந்த உலகம் இன்னொரு போரை தாங்காது - ஐ.நா. பொதுச் செயலாளர் உருக்கம்!
|
|