பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது கப்பல்! உடல் நசுங்கி பலியான ஊழியர்கள்!

Tuesday, September 13th, 2016

ஜேர்மனி நாட்டில் கப்பலின் கூரை பாலம் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர்.

தெற்கு ஜேர்மனியில் உள்ள Erlangen என்ற நகரில் இருந்து Viking Freya என்ற பயணிகள் கப்பல் ஹங்கேரியின் தலைநகரான Budapest நகருக்கு நேற்று புறப்பட்டுள்ளது. கப்பலில் 49 ஊழியர்கள் மற்றும் 181 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், Main-Danube என்ற ஆற்றில் பயணம் செய்த அந்த கப்பல் ஆற்றின் மத்தியில் இருந்த பாலத்தின் மீது உரசி விபத்துக்குள்ளானது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

இரவு நேரம் என்பதால், பாலத்தின் உயரத்தை சரியாக கணிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இந்த விபத்தில் கப்பலின் கூரையில் நின்றுருந்த 49 மற்றும் 33 வயதான இரண்டு ஊழியர்கள் உடல் நசுங்கி பலியாயினர்.

கப்பலின் உட்புறத்தில் இருந்த 181 பயணிகள் மற்றும் 47 ஊழியர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. உயிரிழந்த இருவரும் ஹங்கேரியை சேர்ந்தவர்கள்.

இந்த விபத்தில் கப்பலின் மேற்கூரை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. கப்பல் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கப்பல் நீண்ட நேரம் அங்கேயே நிறுத்தப்பட்டது. பயணிகள் மாற்று கப்பலில் அனுப்பப்பட்ட நிலையில் இந்த விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: