ஹேய்டிக்கு உதவ ஐ.நா. தனது முழுமையான சக்திகளையும் ஒன்று திரட்டும் – பான் கி மூன்!

Sunday, October 16th, 2016

சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹேய்டியின் துயரம் மற்றும் சீர்குலைவை ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் நேரில் பார்வையிட்டுள்ளார்.

உலக உணவு திட்டத்தின் இரண்டு ட்ரக்குகளில் இருந்த உணவுகளை மக்கள் சூறையாடுவதையும், நிலைமையை சமாளிக்க போலிஸாரும் ஐ.நா., அமைதி காப்பாளர்களும் கண்ணீர் புகையை பயன்படுத்தியதையும் தானே கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடுமையாக பாதிக்கப்பட்ட  லே கே நகரின் உள்ளூர் வாசிகள், தங்களுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கு உதவ வேண்டும் என்று அவரை நோக்கி கூச்சலிட்டனர். அவர்களுக்கு உதவ ஐ.நா., தனது அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டும் என்றும் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியுள்ள பேரழிவு குறித்து, சர்வதேச நாடுகளின் பதில் நடவடிக்கை தனக்கு ஏமாற்றம் அளித்தது என அவர் தெரிவித்துள்ளார்.புயலால், 170,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். மேலும் சுத்தமான நீர் இல்லாமையால் அங்கு அதிகப்படியான அளவில் காலரா பரவி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

_91942850_gettyimages-614900952

Related posts: