INCIRLIK விமானத்தள பிரச்சினைக்கு அமெரிக்காவின் ஆதரவை நாடும் ஜேர்மனி

Friday, May 19th, 2017

Incirlik விமானத்தளம் குறித்த துருக்கியுடனான சர்ச்சைகளுக்கு அமெரிக்காவிடம் ஆதரவு கோரியுள்ளதாக ஜேர்மனிய வெளியுறவு அமைச்சர் சிக்மர் கப்ரியல் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனுடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, ‘ துருக்கியுடனான எமது பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்காவிடம் மீண்டும் ஆதரவு கோரியுள்ளோம். இந்த பேச்சுவார்த்தை மிகவும் உதவிக்கரமாக அமையும் என்று நான் நம்புகின்றேன். அவர்களுடன் இணைந்து நாமும் முன்னேற முடியும் என்று நம்புகின்றேன். பல்வேறான விடயங்களில் நாம் ஒன்றுபட்ட கருத்துக்களையே கொண்டுள்ளோம். நாம் ஒரு சமூகமாக ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும். அமெரிக்கர்களுடன் உளவுத்துறையை பகிர்ந்து கொள்வது தேசிய பாதுகாப்பிற்கு முற்றிலும் அவசியமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1915 ஆம் ஆண்டு ஒட்டோமான் படைகளால் ஆர்மீனியர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தை இனப்படுகொலை என்று வகைப்படுத்தி ஜேர்மனிய நாடாளுமன்றம் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டம் நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து Incirlik  விமானத்தளத்திற்குள் ஜேர்மனிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்  நுழைவதற்கு துருக்கி தடை செய்தது.

இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: