பலஸ்தீனத்துக்கு வலுக்கும் ஆதரவு – அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் ஆதரவுப் பேரணி !

Saturday, October 21st, 2023

பலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது.

இரண்டுவார அரச அடக்குமுறைக்கு பிறகு, பேரணி நடத்துவதற்கான அனுமதியை பெற்றுள்ளோம் என பலஸ்தீன ஆதரவு குழுவின் சிட்னி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிட்னி நகர சபைக்கு முன்பாக பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகும் பேரணி CBD வழியாக Belmore பூங்காவை நோக்கி பயணிக்கவுள்ளது.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பலஸ்தீன ஆதரவு பேரணியின்போது வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Opera House இற்கு வெளியே நடைபெற்ற இந்த ஆதரவு பேரணியின்போது இஸ்ரேல் கொடி எரிக்கப்பட்டதுடன், யூத எதிர்ப்பு கோஷங்களும் எழுப்பட்டன.

இதனையடுத்து எட்டு பேர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து இன்று நகர மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்துக்காக பாதுகாப்பு பணியில் 800 முதல் 850 பொலிஸார் ஈடுப்படவுள்ளனர்.

“பேரணி முன்னெடுக்கப்பட்டாலும் வன்முறை மற்றும் வெறுப்பு பேச்சுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. பங்கேற்பாளர்களிடமிருந்து சிறந்த நடத்தையை எதிர்பார்க்கிறோம், எவராவது பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்று நினைத்தால், அவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்வர்” என NSW பொலிஸ் ஆணையாளர் கரேன் வெப் (Karen Webb) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: