ஹேய்ட்டியை புரட்டிப்போட்ட சூறாவளி!

Wednesday, October 5th, 2016

சூறாவளி வறிய நாட்டான ஹேய்ட்டின்  தென் கடற்கரையோரமாக , மணிக்கு சுமார் 220 கிமீ வேகத்துக்கு மேல் வீசிய மேத்யூ  கூறாவளி அந்நாட்டின் விவசாயப்பயிர்களையும் வீடுகளையும்  நாசப்படுத்தியும் சென்றது.

ஹேய்ட்டியில் இரண்டு பேரும் , அண்டை நாடான டொமினிக்கன் குடியரசில் நால்வரும் கொல்லப்பட்டதாக ஆரம்ப கட்டத் தகவல்கள் கூறுகின்றன.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஹேய்ட்டியை கடும் பூகம்பம் ஒன்று தாக்கியதிலிருந்து அந்நாட்டைத் தாக்கும் அடுத்த பெரிய இயற்கை சீற்றம் இதுதான் என்று ஹேய்ட்டியில் உள்ள ஐநா மன்ற அலுவலரான மூரட் வஹ்பா கூறினார்.மேத்யூ சூறாவளி இப்போது கியூபாவை நோக்கி சென்றுவிட்டது. ஆனால் அதன் தாக்கம் குறைந்து விட்டதாக ஆரம்பகட்ட செய்திகள் கூறுகின்றன.

_91524326_haiti

Related posts: