பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான அவதானம்!

Monday, July 8th, 2019

உலக வல்லரசுகளுடனான தெஹிரானின் அணுஆயுத ஒப்பந்தத்தை பாதுகாப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான நிபந்தனைகள் குறித்து ஃப்ரான்ஸும், ஈரானும் அவதானம் செலுத்தியுள்ளன.

ஃப்ரான்ஸ் ஜனாதிபதி எம்மானுஹல் மக்ரோன்  இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானிக்கும், ஃப்ரான்ஸ் ஜனாதிபதி எம்மானுஹல் மக்ரோனுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில் குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

2015இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை கைவிடுவதனால், ஏற்படும் விளைவுகள் குறித்து மக்ரோன் இதன்போது தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.

இதேநேரம், குறித்த ஒப்பந்தத்ததைப் பாதுகாக்க ஐரோப்பிய நாடுகள் செயற்பட வேண்டும என்று ஈரான் ஜனாதிபதி ருஹானி தெரிவித்துள்ளார்.

குறித்த ஒப்பந்தத்திலிந்து கடந்த ஆண்டு அமெரிக்கா வெளியேறியதைத் தொடர்ந்து அது ஆபத்தான நிலையை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: