ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல்: புடின் சார்பான கட்சி முன்னிலை !

Monday, September 19th, 2016

ரஷ்ய பாராளுமன்றத் தேர்தலில், ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ஆதரவான கட்சிகளுக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் பாராளுமன்ற கீழ்சபை தேர்தலில் அந்த நாட்டின் ஜனாதிபதி புடினுக்கு ஆதரவான கட்சிகளுக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், சுமார் 44% வாக்குகள் பெறும் எனவும் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இதனால், நான்காவது முறையாக, 2018ல் நடைபெறும் ஜனாதிபதிக்கான தேர்தலில் வெற்றி பெற்று, புடின் மீண்டும் ஜனாதிபதியாக பதவியை ஏற்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. ரஷ்யாவில், ஜனாதிபதி புடின் ஆட்சியில் மோசமான பொருளாதார சூழல் நிலவி வருகிறது. பல்வேறு பிரச்னைகளால் புடின் ஆட்சி சிக்கல் மிக்கதாகவே உள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் நடைபெற்ற பாராளுமன்ற கீழ்சபை தேர்தலில், ஆளும் ஐக்கிய ரஷ்யா மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகளுக்கு ஆதரவாக, பெரும்பான்மை வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த தேர்தலில் பரவலாக தில்லுமுல்லு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அக்குற்றச்சாட்டுகளை, தேர்தல் ஆணையத்தின் தலைவர், எல்லா பாம்பிலோவா மறுத்துள்ளார்.

ரஷ்யாவில் 450 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற கீழ்சபை இயங்கி வருகிறது. ‘டுமா’ என்றழைக்கப்படும் இந்த கீழ்சபைக்கு தேர்தல் நடைபெற்றது. 2011-ம் ஆண்டு புடினுக்கு எதிராக தலைநகர் மாஸ்கோவில் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்ற பிறகு நடைபெற்ற முதல் சுதந்திரமான தேர்தல் இது தான். இந்த கீழ் சபை தேர்தலானது 2018-ம் ஆண்டில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் புடின் கட்சி வெற்றி பெற உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: