ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்வாங்கிய கடல்!
Monday, April 23rd, 2018
தமிழகம் – ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியுள்ளது.
கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் பகுதியில் நேற்று இவ்வாறு கடல் உள்வாங்கியிருந்தாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் கடலில் யாரும் நீராட வேண்டாம் எனவும் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைகுடியில் நேற்று ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் கடல் உள்வாங்கியது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்திருந்தாக தமிழக செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
Related posts:
தேவாலயத்தில் கொலைவெறி தாக்குதல்: அமெரிக்காவில் 27 பேர் பலி!
உலகை அச்சுறுத்தும் கொரோனா: தென்கொரியாவில் பொதுத் தேர்தல் – வெற்றிபெற்றது லிபரல் கட்சி !
பொருளாதாரத்தை மீட்டெடுக்க 5.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சிறப்பு திட்டங்களை அறிவித்தது ச...
|
|
|


