பொருளாதாரத்தை மீட்டெடுக்க 5.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சிறப்பு திட்டங்களை அறிவித்தது சிங்கப்பூர்!

Tuesday, August 18th, 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் நிலைக்குலைந்து போயுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில், 5.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சிறப்பு திட்டங்களை சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

கொவிட்-19 நோய்த்தொற்று பரவல் காரணமாக சிங்கப்பூர் பொருளாதாரம் சரிவைக் கண்டது. நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் அந்நாட்டின் பொருளாதாரம் 6.7 சதவீத அளவுக்கு சரிவடைந்தது.

இத்தகைய சூழலில் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சிறப்பு திட்டங்களை சிங்கப்பூர் துணை பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் ஸ்வீ கீட் அறிவித்தார்.

அதில் பெரும்பாலான பகுதி நாட்டில் உள்ள பணியாளர்களைக் காக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பெரும் சரிவைச் சந்தித்த துறைகளை மீட்டெடுக்கவும் பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். நோய்த்தொற்றால் சரிவைச் சந்தித்த நிறுவனங்களுக்கும் போதிய நிதியுதவி வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

இந்த ஆண்டின் முதல் பாதியில் ஆசியாவில் மிக மோசமான பொருளாதார சுருக்கங்களில் ஒன்றை சிங்கப்பூர் பதிவுசெய்தது.

கொரோனா வைரஸின் பரவலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட உலகெங்கிலும் முடக்கநிலை நடவடிக்கைகள் உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகளில் பெரும்பகுதியை நிறுத்தியதால், அதன் திறந்த மற்றும் வர்த்தக சார்புடைய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts: