குழந்தையைக் காப்பாற்றியவருக்கு குடியுரிமை : பிரான்ஸ் ஜனாதிபதி பாராட்டு!

Tuesday, May 29th, 2018

ஆபிரிக்க நாட்டிலிருந்து பிரான்சிற்கு சென்ற அகதி ஒருவர் செய்த துணிச்சலான செயலுக்காக பிரான்ஸ் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

மாலியைச் சேர்ந்த காசமா (Gassama) என்பவர் தொடர்மாடி ஒன்றின் நான்காம் மாடியின் வெளியே தொங்கிக் கொண்டிருந்த நான்கு வயது குழந்தையினை மீட்டெடுத்துள்ளார்.

அபாயமான அவரின் முயற்சியால் கட்டடத்திற்கு வெளியே ஒவ்வொரு தட்டு தட்டாக சாதுரியமான வகையில் குழந்தை அகப்பட்டிருந்த தட்டை சென்றடைந்து குழந்தை மீட்கப்பட்டதனை நூற்றுக்கணக்கான மக்கள் வீதியில் இருந்து பார்த்து பாராட்டியுள்ளனர்.

இந்த செயலை கேள்வியுற்ற பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், அவரை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து தனிப்பட்ட பாராட்டை தெரிவித்ததுடன், அவருக்கு பிரான்ஸ் குடியுரிமையையும் வழங்கியுள்ளார்.

அத்துடன் பிரான்ஸ் நாட்டின் சார்பாக பதக்கம் ஒன்றை வழங்கியதுடன், அவருக்கு தீயணைக்கும் படையில் இணைவதற்கான அனுமதியினையும் வழங்கியுள்ளார்.

Related posts: