அயர்லாந்து பிரதமரானார் மைக்கேல் மார்ட்டின்!
Monday, June 29th, 2020
அயர்லாந்து பாராளுமன்றத்தின் கீழவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மைக்கேல் மார்டின் வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டு பாராளுமன்றத்தின் கீழவையில் நடைபெற்றது. பியானா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்டின் பிரதமர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
கீழ் அவையில் மொத்தமுள்ள 160 உறுப்பினர்களில் 93 பேர் மைக்கேல் மார்ட்டினுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 63 பேர் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இதன் மூலம் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் மைக்கேல் மார்டின் வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
Related posts:
பலாலியிருந்து சென்னைக்கான விமானசேவை கைவிடப்பட்டது ?
வரலாற்றில் முதல்முறை ஆட்டம் காணும் அமெரிக்கா!
முக்கிய பதவிகள் எதிர்வரும் நாட்களில் மறுசீரமைக்கப்படும் - தேர்தலை எதிர்கொள்ளவும் தயார் என ஸ்ரீலங்கா...
|
|
|


