கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அதிகரிப்பு!

Saturday, July 7th, 2018

அமெரிக்காவின் நடவடிக்கை காரணமாக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது 100 டாலரை எட்டும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டாம் என இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை வலியுறுத்தி உள்ளது. அத்துடன் கூடுதல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யுமாறு சவுதிஅரேபியாவை கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக விரைவில் ஒரு பீப்பாய் விலை 100 டாலரை எட்டும் என்றும், இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் தவறான நடவடிக்கையே காரணம் என்றும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் கச்சா எண்ணெய் விலையை குறைக்க சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா மேற்கொள்ளும் முயற்சி பலன் அளிக்காது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

Related posts: