ஹிலாரியை விசாரணை செய்ய வேண்டும் – ட்ரம்ப் கோரிக்கை!

Wednesday, August 24th, 2016

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் மீதான புகார்கள் குறித்து, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்,” என, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில், பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் டொனால்டு டிரம்ப், 70 மற்றும் ஜனநாயகக் கட்சியில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், 68, ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். டிரம்ப், பிரசாரக் கூட்டங்களில், ஹிலாரி கிளிண்டனை கடுமையாகவிமர்சித்து வருகிறார்.

ஒஹியோவில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ஹிலாரி கிளிண்டன் வெளியுறவு அமைச்சராக இருந்த போது, அரசு பணிகளுக்கு, தனிப்பட்ட, ‘இ – மெயில்’ முகவரியை பயன்படுத்தியது குறித்து, எப்.பி.ஐ., எனப்படும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது. ஆனால், வழக்கை கைகழுவி விட்டது. அது போலவே, கிளிண்டன் பவுண்டேஷக்கு பல கோடி ரூபாய் வந்த விவகாரம், அவரது ஊழலுக்கு சாட்சியாக உள்ளது.

ரஷ்யாவுக்கு யுரேனியம் விற்பனை செய்யும் ஒப்பந்தம் செய்யப்பட்டதிலும், முறைகேடுகள் நடந்துள்ளன.இதுகுறித்து, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு சுதந்திரமான, சிறப்பு வழக்கறிஞர்களை அமெரிக்க நீதித்துறை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்..

Related posts: