பிரெக்ஸிட் ஒப்பந்த அறிக்கை வெளியானது!

Friday, July 13th, 2018

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் ஒப்பந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதியுடன் பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது. இந்நிலையில் ஐரோப்பிய யூனியனுக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்பில் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது, அதில் ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்தவர்கள் பிரித்தானியாவுக்கு வர விசா தேவையில்லை என்பது போன்ற சலுகைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பிரித்தானியாவை சேர்ந்தவர்களும் ஐரோப்பிய யூனியனுக்கு தற்போது உள்ள நடைமுறையின் படியே சென்று வரலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்கள் சென்று வருவதிலும் எந்தவித புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. குறிப்பாக ஐரோப்பிய யூனியனுடன் பெரிதும் நெருக்கம் காட்டும் வகையிலேயே ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts: