பிரித்தானிய அரச குடும்பத்தின் உயரிய விருது!

Wednesday, June 19th, 2019

பிரித்தானிய அரச குடும்பத்தின் உயரிய விருது வழங்கும் விழாவில் மகாராணி எலிசபெத் கலந்து கொண்டார்.

பிரித்தானியாவின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் கார்ட்டர் விருது 1348-ஆம் ஆண்டு மூன்றாம் எட்வர்ட் மன்னரால் அறிமுகம் செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்பட்டு வருவதால், இந்தாண்டிற்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த ஆண்டு ஸ்பெயின் அரசர் 6-ஆம் பிலிப்பிற்கு விருது அளிக்கப்பட்டது. தொடர்ந்து விண்ட்சர் பகுதியில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்திலிருந்து அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

இதில் கார்டர் மரியாதைக்குரிய முத்திரை பதித்த, நீல நிற வெல்வெட் அணிந்து வந்த ராணி எலிசபெத், அரச குடும்ப பிரபுக்கள், ஸ்பெயின் அரசர் 6-ஆம் பெலிப், அவரது மனைவி லெட்டிசியா, நெதர்லாந்து அரசர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் அவரது மனைவி ராணி மாக்ஸிமா ஆகியோர், தனித்தனி சாரட் வண்டியில் ஏறி சென்றனர்.

Related posts: